இந்தியா

ஹிந்துக்களின் கனவை நனவாக்கியுள்ளார் பிரதமர் மோடி: லல்லு சிங் 

DIN


லக்னௌ: ராமர் கோயில் கட்டுவதன் மூலம் ஹிந்துக்களின் நீண்ட நாள் கனவை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியுள்ளார் என்று அயோத்தி மக்களவை உறுப்பினர் லல்லு சிங் தெரிவித்துள்ளார். 

கடந்த 1990-ஆம் ஆண்டு ராமஜென்ம பூமி இயக்கம் பிரபலமடைவதற்கு முன்பு இருந்தே அந்த இயக்கத்தில் இவர் அங்கம் வகித்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: 

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மறைந்த முன்னாள் தலைவர் அசோக் சிங்கல், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் துறவிகள் பலர் ராமஜென்ம பூமி இயக்கத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளனர். இறுதியாக ஹிந்துக்களின் கனவை பிரதமர் மோடி நனவாக்கியுள்ளார். 

அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. இதற்காகப் பலர் பாடுபட்டுள்ளனர், பலர் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்துள்ளனர். 

கோயில் விரைவில் கட்டப்படும் என்பதால், லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்க கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அயோத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கோயில் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 
அனைவரின் எண்ணத்திலும் ராமர் உள்ள நிலையில் அரசியல், மதப் பிரச்னைகள் குறித்து பேச விரும்பவில்லை. பெரும்பான்மையான மக்கள் கோயில் கட்ட வேண்டும் என விரும்புகின்றனர். கோயில் கட்டுவதன் மூலம் அரசியலின் திசை மாறும். இது மக்களை ஒன்றிணைத்து, கலாசார தேசியத்தை ஊக்குவிக்கும். 

கோயில் கட்டப்பட்ட பிறகு நாட்டில் அதிகமான மக்களை ஈர்க்கும் பெரிய புனிதத் தலமாக அயோத்தி விளங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT