இந்தியா

பஞ்சாப்பில் மீண்டும் திறக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள்

DIN

பஞ்சாபில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடங்கள் புதன்கிழமை முதல் திறக்கப்பட்டன.

கரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது கரோனா பரவல் குறைந்த பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி புதன்கிழமை முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டன.
அதேநேரத்தில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் இடைவெளிகளை பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது 19 ஆயிரத்து 15 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT