உலகின் நான்காவது முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஐரோப்பாவின் பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நடப்பாண்டில் 220 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்ற அம்பானி தற்போது 806 கோடி அமெரிக்க டாலர் சொத்துமதிப்பு கொண்டவராக உயர்ந்துள்ளார்.
பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் ஆகியோரைத் தொடர்ந்து அம்பானி அதிக சொத்துப் பட்டியல் உள்ள நபராக உள்ளார்.