இந்தியா

சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தக்கூடாது என நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

DIN

கடைக்காரரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சமூகவலைத்தளத்தை 2 மாதங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றம் ஜாமின் வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வர் கிராமத்தில் வசிக்கும் ஹரேந்திர தியாகி (18). இவர் உள்ளூர் கடைக்காரரைத் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூன் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

சமீபத்தில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் தனது வழக்குரைஞர் மூலம் ஜாமின் கோரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குற்றம்சாட்டப்பட்டவரின் எதிர்கால நலனைக்கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவரது வழக்குரைஞர் மனுவில் குறிப்பிட்டுருந்தார். இதனைப் பரிசீலித்த நீதிமன்றம் மனுதாரர் 2 மாதங்களுக்கு வாட்சப்,முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், தனது சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்கியது.

ஜாமின் மனுவிற்கு நீதிமன்றம் விதித்த வித்தியாசமான நிபந்தனைகள்  பலரையும் கவர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT