இந்தியா

நேபாளம் நாட்டிற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை வழங்கிய இந்தியா

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாக ரூ.2.8 கோடி மதிப்பிலான 10 வென்டிலேட்டர் கருவிகளை நேபாளம் நாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இந்தியா வழங்கியது.

நேபாளத் தலைநகர் காத்மண்டில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாளத்திற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா வென்டிலேட்டர்களை ராணுவத் தலைமை அதிகாரி பூர்ண சந்திர தபாவிடம் வழங்கினார்.

நேபாளத்தில் ஏற்படும் பேரிடர்களில் மீட்பு பணிகளில் இந்திய ராணுவம் உதவி வந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT