முகப்பு
இந்தியா

ஒரே நாளில் கரோனாவில் இருந்து 54,859 பேர் குணமடைந்தனர்; பலி 2% ஆகக் குறைவு

நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பில் இருந்து 54,859 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,35,743 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
ஒரே நாளில் கரோனாவில் இருந்து 54,859 பேர் குணமடைந்தனர்
பகிர்:


புது தில்லி: நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பில் இருந்து 54,859 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,35,743 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் நாட்டில் கரோனா பாதித்து பலியாவோரின் எண்ணிக்கை 2% ஆகக் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றைய நிலவரப்படி கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,15,075 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 62,064 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கரோனா பாதித்து 6,34,945 பேர் சிகிச்சையில் உள்ளனர். 15,35,744 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

ஒரே நாளில் கரோனாவுக்கு 1,007 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 44,386 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 54,859 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 70% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களில் தற்போது 28.66% பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.