இந்தியா

ஜார்கண்டில் இதுவரை 2,565 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு!

DIN

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை 2,565 காவலர்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மாநில காவல் தலைமையகம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை 2,565 காவலர்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் காவல்துறை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர், ஆறு துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள், 25 ஆய்வாளர்கள், 152 துணை ஆய்வாளர்கள், 217 உதவி துணை ஆய்வாளர்கள், 4 முதல்தர குமாஸ்தாக்கள், 178 காவலர்கள் , 1865 ஜவான்கள் மற்றும் ஓட்டுனர்கள், 54 நான்காம் நிலை  ஊழியர்கள் மற்றும் 56 ஊர்க்காவலர்கள் அடங்குவர்.

நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் ஆறு  பேர் இதன்காரணமாக மரணமடைந்திருக்கின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT