மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48-ஆக உயர்வு
கேரளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
கேரளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் தொடர் கனமழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு வசித்துவந்த தொழிலாளர்கள் 80 பேர் வரையில் இதில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், 43 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.