இந்தியா

ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ஜாவடேகர் கண்டனம்

DIN


புது தில்லி: மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலக யானைகள் தின கொண்டாட்டம், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாவடேகர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு }2020 அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது இறுதியான அறிவிக்கை அல்ல. இதுபோன்ற விஷயங்களில் பொதுமக்கள் ஆலோசனை கூறுவதற்காக, அரசு விதிமுறைகளின்படி 60 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். ஆனால்,  கரோனா தொற்று பரவலையொட்டி, இந்த அவகாசம் 150 நாள்களாக நீட்டித்து வழங்கப்பட்டிருந்தது. அரசு அறிவிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவற்றை பரிசீலனை செய்வோம். அதன் பிறகு இறுதி வரைவு அறிவிக்கை வெளியிடப்படும்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு - 2020 ஒரு பேரிடராகும். இந்த வரைவானது, மேலும் சூழலியல் அழிவுக்குத்தான் வழிவகுக்கும். சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாகப் பாதிக்கப்படும் சமுதாயத்தினரின் குரலை ஒடுக்க முற்படுகிறது இந்த வரைவு. இதற்கு எதிராக ஒவ்வொரு இந்தியரும் போராட வேண்டும். இந்த அறிவிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும்' என்று கூறியுள்ளார்.

அவரது இந்த எதிர்ப்பு தேவையில்லாதது. கண்டனத்துக்குரியது. இப்போது போராட்டம் நடத்தச் சொல்லுபவர்கள், அவர்களது ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறாமலேயே பெரிய பெரிய முடிவுகளையெல்லாம் எடுத்தார்கள். அதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் ஜாவடேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT