இந்தியா

பிரணாப் உடல்நிலை மேலும் மோசமடைந்தது: ராணுவ மருத்துவமனை

DIN


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தில்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுபற்றி ராணுவ மருத்துவமனை சற்று முன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில், எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் உள்ளார். அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அவரது உடல்நிலை பற்றி மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாவது:

"முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10-ம் தேதி நள்ளிரவு ராணுவ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் மிகப்பெரிய ரத்த அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக உயிர் காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனையின்போது அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT