இந்தியா

கர்நாடகம்:  பேருந்து தீ விபத்தில் 5 பேர் பலி

DIN

சித்ரதுர்கா: கர்நாடகம் மாநிலம் சித்ரதுர்காவில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

கர்நாடகம் மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம் அருகில் உள்ள ஹிரியூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் "குக்கே ஸ்ரீ டிராவல்ஸ்" க்கு சொந்தமான பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது, பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவி எரிந்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஹிரியூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT