சிசேரியன் செய்து கர்ப்பிணியைக் காப்பாற்றிய மிசோரம் எம்எல்ஏ 
இந்தியா

சிசேரியன் செய்து கர்ப்பிணியைக் காப்பாற்றிய மிசோரம் எம்எல்ஏ

மகப்பேறு மருத்துவரான மிசோரம் எம்எல்ஏ, சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

DIN

குவகாத்தி: மகப்பேறு மருத்துவரான மிசோரம் எம்எல்ஏ, சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

மிசோரத்தின் சம்பாய் மாவட்டத்தைச் சேர்ந்த ந்குர் கிராமத்தைச் சேர்ந்த லால்மங்கைசாங்கி என்ற கர்ப்பிணிக்கு திங்கள்கிழமை பிரசவ வலியுடன் ரத்தப் போக்கும் ஏற்பட்டது. உடடினயாக அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அங்கு பணியில் இருந்த மருத்துவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு விடுப்பில் சென்றிருந்தது தெரிய வந்தது.

சம்பாய் வடக்கு தொகுதியைச் சேர்ந்த மிசோ தேசிய முன்னணிக் கட்சி எம்எல்ஏவான மருத்துவர் தியாம்சங்காவுக்கு இந்த தகவல் தெரிய வந்தது. அவர் 30 ஆண்டு காலம் மகப்பேறு மருத்துவராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். உடனடியாக கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்த தியாம்சங்கா, அங்கு அவருக்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்த்தார்.

இது குறித்து தியாம்சங்கா கூறுகையில், கர்ப்பிணியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சையின் போது எந்த சிக்கலும் ஏற்படவில்லை. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

ஒரு வேளை கர்ப்பிணியின் குடும்பத்தார் திட்டமிட்டது போல, அவரை தலைநகர் அய்ஸ்வால் அழைத்துச் சென்றிருந்தால் என்னவேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால் இதுதான் கடவுளின் திட்டம், அந்தப் பெண்ணும் அதிர்ஷ்டசாலி, நானும் கூட அதிர்ஷ்டசாலிதான், நல்லவேளையாக சம்பாயில் நான் இருந்தேன் என்கிறார் தியாம்சங்கா மகிழ்ச்சியோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT