ஒடிசாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரேநாளில் 1,981 பேருக்குத் தொற்று
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,981 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 52,653 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,981 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 52,653 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஒரே நாளில் ஒன்பது பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 314 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1,225 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து பதிவாகியுள்ளன. மேலும் 756 பேர் உள்ளூரில் பதிவாகியுள்ளன.
Advertisement
தற்போது 15,808 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட 36,478 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.