இந்தியா

மணிப்பூரில் 13 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் கட்கரி 17ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

DIN

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்சரி, மணிப்பூரில், 13 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு இம்மாதம் 17-ம் தேதியன்று அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், சாலைப்பாதுகாப்புத் திட்டம் ஒன்றையும் அவர் துவக்கி வைக்கிறார். மெய்நிகர் முறையில், நடைபெறும் இந்த விழாவுக்கு மணிப்பூர் மாநில முதல்வர் என் பைரன் சிங் தலைமை வகிக்கிறார். 

இதில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

ரூ.3,000 கோடி செலவில் 316 கிமீ நீளத்திற்கு, இத்திட்டங்கள் வாயிலாக சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் மணிப்பூர் மாநிலத்திற்கு சிறந்த போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படுவதுடன் பொருளாதார வளர்ச்சியும் உயரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT