மூணாறு நிலச்சரிவில் பலி 56 ஆக உயர்வு; 2 வயது குழந்தையின் உடல் மீட்பு!
மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் ஒரு உடல் இன்று மீட்கப்பட்டதை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் ஒரு சிறுமியின் உடல் இன்று மீட்கப்பட்டதை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் தொடர் கனமழை காரணமாக கடந்த 6 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு வசித்துவந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 80 பேர் வரையில் இதில் சிக்கினர்.
இதில், 55 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது. 2 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தையின் பெயர் தனுஷ்கா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 12 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காணாமல் போனவர்களை 14 பேரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.