முகப்பு
இந்தியா

தில்லி நகரங்களில் உருவாகிவரும் காடுகள்: அமைச்சர் கோபால் ராய்

தில்லியில் 12 நகரங்களில் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 4 நகரங்களில் விரைவில் காடுகள் உருவாக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராவ் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் 12 நகரங்களில் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 4 நகரங்களில் விரைவில் காடுகள் உருவாக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராவ் தெரிவித்துள்ளார். 


மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தில்லி சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராவ், நாட்டின் தலைநகரான தில்லியில் உள்ள 12 நகரங்களில் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் 5 நகரங்களில் உள்ள காடுகள் 10 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  நசிப்பூர் (28 ஹெக்டர்), அலிப்பூர் (19.50 ஹெக்டர்), தாஜ் என்கிளேவ் (56 ஹெக்டர்), மிட்ரோன் பாகெட் (35.15 ஹெக்டர்), ஹவுஸ் ராணி (28 ஹெக்டர்) ஆகிய பகுதிகளில் காடுகள் அமைக்கப்பட்டுள்ளன.  

மேலும் நான்கு நகரங்களில் காடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாமூர்பூர், அய்நகர், ஜான்பூர் மற்றும் தேரா மண்டி ஆகிய பகுதிகளில் காடுகள் உருவாக்கும் பணி விரைவில் முடிவடையும் என்று கூறினார்.

தில்லியில் மாசுபாட்டை குறைக்கும் வகையில், தில்லி சுற்றுச்சூழல் நலத்துறை, மத்திய அரசுடனும், அண்டை மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கோபால் ராவ் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →