முகப்பு
இந்தியா

அசாமில் 12ஆம் வகுப்பு முதல்தர மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கும் மாநில அரசு

அசாம் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் தர மதிப்பில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளதாக  அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட், 2020 at 1:13 PM
அசாம் மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
பகிர்:

அசாம் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் தர மதிப்பில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளதாக  அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் அசாம் மாநில அரசு அறிவித்துள்ள திட்டம் நாடு முழுவதும் முக்கியக் கவனம் பெற்றுள்ளது.

‘பிரக்யன் பாரதி’ எனும் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது. அசாம் உயர்நிலைக் கல்வி கவுன்சிலின்  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சுமார் 22 ஆயிரம் ஸ்கூட்டர்கள் விநியோகிக்கப்படும் என  மாநிலத்தின் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஒரு ஸ்கூட்டருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 2020 அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இலவச ஸ்கூட்டர் விநியோகம் நிறைவடையும். இந்த வாகங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிற நபர்களுக்கு விற்பனை செய்ய முடியாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அரசு கல்லூரிகளில் 25 சதவீத இடங்களை மாநில அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.