மும்பை காவல்துறையில் மேலும் ஒரு காவலர் கரோனாவுக்கு பலி
மும்பை காவல்துறையில் 35 வயதான துணை ஆய்வாளர் கரோனா வைரஸ் தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மும்பை காவல்துறையில் 35 வயதான துணை ஆய்வாளர் கரோனா வைரஸ் தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன் மூலம் மும்பை காவல்துறையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தியோனர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
முன்னதாக, அதே காவல் நிலையத்தில் மேலும் ஒரு காவருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து வீடுதிரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.