ராமர் கோயில் கட்டுமானத்தில் இரும்பின் பயன்பாடு இருக்காது
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த கட்டுமானத்தில் இரும்பின் பயன்பாடு இருக்காது என்று ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த கட்டுமானத்தில் இரும்பின் பயன்பாடு இருக்காது என்று ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்து இன்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த் ஷேத்திரா அறக்கட்டை அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. கோயில் அமையவிருக்கும் பகுதியில் மண்ணின் தரத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் 36 - 40 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோயில் கட்டுமானப் பணியில் இரும்பு பயன்படுத்தப்படாது.
இந்திய கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த கட்டமைப்பு அமையவுள்ளது. நிலநடுக்கம், சூறாவளி போன்ற எந்த இயற்கை பேரிடரையும் தாங்கும் சக்தி கொண்டதாக இந்த கட்டடம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.