முகப்பு
இந்தியா

அசாமில் திறக்கப்பட்ட இந்தியாவின் நீளமான ரோப்வே சேவை

அசாம் மாநிலத்தில் குவஹாத்தி மற்றும் வடக்கு குவஹாத்தியை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான நதி ரோப்வே திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 24 ஆகஸ்ட், 2020 at 4:10 PM
இந்தியாவின் நீளமான அசாம் ரோப்வே
பகிர்:

அசாம் மாநிலத்தில் குவஹாத்தி மற்றும் வடக்கு குவஹாத்தியை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான நதி ரோப்வே திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

அசாம் மாநிலத்தில் குவஹாத்தியின் கச்சாரி காட்டில் இருந்து வடக்கு குவஹாத்தியில் உள்ள டவுல் கோவிந்தா கோயில் வரை இந்த ரோப்வே சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மபுத்ரா நதியில் 1.8 கி.மீ நீளமுள்ள ரோப்வே, எட்டு நிமிட நேரத்தில் தனது பயண தூரத்தை அடையும் எனவும் தற்போது கரோனா தொற்று காரணமாக 15 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

“ரோப்வே வலிமைமிக்க பிரம்மபுத்திராவின் அழகானக் காட்சியை வழங்கும். இது மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்தும்.” என அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.