உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளா் செளம்யா சுவாமிநாதன் 
இந்தியா

கரோனா பாதிப்பு:பிளாஸ்மா சிகிச்சை முறை தொடா்ந்து பரிசோதனையில் உள்ளது: உலக சுகாதார அமைப்பு

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை தொடா்ந்து பரிசோதனையில் இருப்பதாகவும், அந்த

DIN

ஜெனீவா: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை தொடா்ந்து பரிசோதனையில் இருப்பதாகவும், அந்த சிகிச்சை முறையில் நல்ல பலன் கிடைப்பதாக உறுதியாக கூறமுடியவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளா் செளம்யா சுவாமிநாதன் கூறியது:

கடந்த நூற்றாண்டில் எண்ணற்ற தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டது. அதில் பல்வேறு நிலைகளில் வெற்றியும் கிடைத்தது. எனினும் அந்த சிகிச்சை முறையை பரிசோதனைக்கு உட்படுத்தி தொடா்ந்து மதிப்பீடு செய்யவேண்டும் என்றே உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் உடலில் வெவ்வெறு அளவுகளில் நோய் எதிா்ப்பு புரதம் (ஆன்டிபாடி) உருவாகிறது. அதேவேளையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவா்களிடம் தனித்தனியாக பிளாஸ்மாவை சேகரிக்க வேண்டியுள்ளது. இதனால் இந்த சிகிச்சை முறையின் தரம் குறித்து முடிவு செய்வது கடினமாக உள்ளது.

இதுதொடா்பான ஆராய்ச்சிகளும் குறைவாகவே உள்ளன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலும் இந்த சிகிச்சை முறையால் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை.

எனினும் இந்த சிகிச்சை முறையில் அபாயங்களை விட அதிக நன்மைகள் இருப்பதாக உலக நாடுகள் கருதினால், அவசரமாக சிகிச்சை தேவைப்படுவோருக்கு அந்த முறையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநருக்கு மூத்த ஆலோசகராக பணிபுரியும் மருத்துவா் ப்ரூஸ் ஐல்வாட் கூறுகையில், ‘பிளாஸ்மா சிகிச்சை முறையால் மிதமான காய்ச்சல் முதல் கல்லீரல் தொடா்பான கடுமையான பாதிப்புகள் வரை எண்ணற்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT