புதுதில்லியில் அடுத்த 3 நாட்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைநகர் புதுதில்லியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் தில்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக தில்லியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 முதல் 28 வரை டெல்லி உட்பட வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான பருவமழை எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நகரின் சில பகுதிகள் ஏற்கெனவே புதன்கிழமை காலை முதல் லேசான இடைப்பட்ட மழை பெய்யத் தொடங்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.