குஜராத்தில் வீட்டுத் தனிமையிலிருந்த கரோனா நோயாளி தற்கொலை
குஜராத்தின் சூரத் நகரத்தின் வராச்சா பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குஜராத்தின் சூரத் நகரத்தின் வராச்சா பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சூரத்தில் 64 வயதான முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கரோனனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் வீட்டு தனிமைப்படுத்தலிலிருந்தார்.
இந்தநிலையில் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கபோத்ரா காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.
Advertisement
விசாரணையில் உயிரிழந்தர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டிருந்தார், அதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.