முகப்பு
இந்தியா

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம்: பஞ்சாப் முதல்வர்

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பகிர்:

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டன. 

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறையாததால்  தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், 'நீட்மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம். இதற்கு அரசு ஒப்புக்கொள்ளும் என்று நினைக்கிறேன். முன்னதாக பல்வேறு தொழில்முறை தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஆன்லைன் தேர்வு முறையை பின்பற்றி வரும்போது இங்கு மட்டும் ஏன் நடத்த முடியாது?' என கேள்வி எழுப்பியுள்ளார். 

மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →