மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜாருக்கு கரோனா பாதிப்பு
மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜாருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புது தில்லி: மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜாருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
கடந்த சில நாள்களாக உடல்நிலையில் பிரச்னைகள் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின் படி சிகிச்சை பெற்று வருகிறேன்.
என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் இந்தியில் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், கரோனா பாதிப்பு 33 லட்சத்தை தாண்டியது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 1,023 புதிய இறப்புகளுடன், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 60,472ஐ எட்டியுள்ளது.