பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் தொடர் பின்னடைவு: ராணுவ மருத்துவமனை
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனிடையே அவருக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானதால், மருத்துவர்கள் அவரை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் கடந்த வாரம் ஒருசில முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக அவரது மகன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.