முகப்பு
இந்தியா

அமேசானுக்கு எதிராக விற்பனையாளர்கள் புகார்

ஆன்லைன் விற்பனையில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி பிரபல ஆன்லைன் வணிகத் தளமான அமேசானுக்கு எதிராக 2,000 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஆகஸ்ட், 2020 at 6:00 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆன்லைன் விற்பனையில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி பிரபல ஆன்லைன் வணிகத் தளமான அமேசானுக்கு எதிராக 2,000 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமாக அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் அமேசான் நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக விற்பனையாளர்கள்  போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

அகில இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கம்,  அமேசான் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement

உற்பத்தியாளர்களிடமிருந்து மொத்தமாக பொருட்களை வாங்கும் அமேசான் சில குறிப்பிட்ட விற்பனை நிறுவனங்களுக்கு மட்டும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அந்த விற்பனை நிறுவனங்களின் சலுகைகளைப் பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனையில் அதிகப்படியான தள்ளுபடியைத் தடுக்க இந்தியா கடந்த ஆண்டு விதிமுறைகளை கடுமையாக்கியது. ஆனால் அமேசான் சலுகைக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கு சிக்கலான வணிக கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதாக சிறு விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.