முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் எஸ்.எஸ்.பி முகாமில் 50 வீரர்களுக்கு கரோனா

உத்தரகண்டில் உள்ள சாஸ்தா சீமா பால் (எஸ்.எஸ்.பி) முகாமில் உள்ள 50 வீரர்கள் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சாமோலி முதன்மை மருத்துவ அதிகாரி ஜி.எஸ் ராணா தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
Uttarakhand: 50 SSB jawans infected by COVID-19
பகிர்:

உத்தரகண்டில் உள்ள சாஸ்தா சீமா பால் (எஸ்.எஸ்.பி) முகாமில் உள்ள 50 வீரர்கள் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சாமோலி முதன்மை மருத்துவ அதிகாரி ஜி.எஸ் ராணா தெரிவித்துள்ளார். 

குவாலடத்தில் உள்ள எஸ்.எஸ்.பி முகாமில் மொத்தம் 50 வீரர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மாதிரிகள் நேற்று மாலை எடுக்கப்பட்ட நிலையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

உத்தரகண்டில் தற்போது 17,277 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 5,274 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும், 11,775 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும், தொற்று காரணமாக 228 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.