முகப்பு
இந்தியா

புல்வாமாவில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் ஜாதூரா பகுதியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் காஷ்மீர் மண்டல காவல்துறைய

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
J-K: Three unidentified terrorists killed in Pulwama encounter
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் ஜாதூரா பகுதியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் காஷ்மீர் மண்டல காவல்துறையினர் தெரிவித்தனர்.

சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிதிகளுக்கும் இடையே இந்த மோதல் நடைபெற்றது. 

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் பணிகள் அந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்றன என்று காஷ்மீர் மண்டல காவல்துறை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, ஷோபியன் மாவட்டத்தின் கிலூரா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.