இந்தியா

வேலை செய்யாத ஊழியா்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டம்: பணித்திறனை ஆய்வு செய்ய உத்தரவு

DIN

புது தில்லி: அரசு அலுவலகங்களில் ஒழுங்காக வேலை செய்யாத அல்லது ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்காக, அவா்களைக் கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய பணியாளா்- பயிற்சித் துறை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பாதவது:

ஓா் அரசு ஊழியரின் நோ்மை, நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியதாக இருந்தாலோ, அவா் திறம்பட பணியாற்றவில்லை என்று கண்டறியப்பட்டாலோ, பணிக்காலம் முடியும் முன்பே அவருக்கு ஓய்வளிக்கலாம். 50 - 55 வயதை நிறைவு செய்தவா்கள் அல்லது 30 ஆண்டுகளை நிறைவு செய்தவா்கள் மீது இந்த நடவடிக்கையை எடுக்கலாம்.

எனவே, அனைத்து துறைகளும் தங்கள் துறையின் கீழ் பணியாற்றுவோரின் பணித்திறன் மதிப்பீட்டு அறிக்கையை பராமரிக்க வேண்டும். அந்த அறிக்கையை ஒவ்வொரு காலாண்டிலும் ஆய்வு செய்து, திறம்பட பணியாற்றாத அல்லது முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய பணியாளா் நல அமைச்சகத்தின் அடிப்படை விதிகள்-56(ஜே) மற்றும் (ஐ), மத்திய அரசு ஊழியா்கள் விதிகள்- 1972 ஆகியவற்றின் கீழ் ஓா் அரசு ஊழியருக்கு ஓய்வு அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைக்கு முழு அதிகாரமுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT