இந்தியா

மிசோரமில் மூன்றரைக் கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

DIN

ஐசவல்: வடகிழக்கு மாநிலமான மிசோரமில், நமது அண்டைநாடான மியான்மரின் எல்லையை ஓட்டியுள்ள பகுதியொன்றில் மூன்றரைக் கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மிசோரமில் மியான்மரின் எல்லையை ஓட்டியுள்ள சம்பை மாவட்டத்தின் டில்ட்லங் பகுதியில் போதைப்போருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை ராணுவ படைப்பிரிவான அசாம் ரைபிள்ஸ் அணியின் ஐசவல் பட்டாலியன் வீரர்கள் மற்றும் வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சேர்ந்து சனிக்கிழமையன்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் போதைமருந்து வியாபாரி ஒருவரிடம் இருந்து மூன்றரைக் கோடி மதிப்புள்ள மீத்தாபீட்டமைன் எனும் விருந்துகளில் பயன்படுத்தப்படும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதன் சந்தை மதிப்பு ரூபாய் மூன்றரைக் கோடி என்று அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT