இந்தியா

ஓணம்: கரோனா பரவலால் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்

DIN

கரோனா பெருந்தொற்று பரவலால், ஓணம் பண்டிகையை கொண்டாடும்போது மக்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மனதின்குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ''ஓணம் பண்டிகையை நாட்டு மக்கள் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். ஓணம் பண்டிகையின்போது வீடுகளை பூக்களால் மக்கள் அலங்கரிப்பார்கள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். பண்டிகையை கொண்டாடும்போது கரோனா தொற்று பரவல் காரணமாக  மக்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்'' என்று கூறினார்.

மேலும், ''கலாச்சாரத்தை காக்கும் வகையிலான பொம்மைகள் உருவாக்கும் மையமாக தஞ்சாவூர் உள்ளது. பொம்மைகள் உருவாக்கும் முறை புதிய கல்விக்கொள்கையில் பாடத்திட்டமாக சேர்க்கப்படும். மேலும் பாரம்பரிய விளையாட்டுகளை கணினிமயமாக்குவதன் மூலம் நமது சிறப்புத்தன்மையை உலகிற்கு பறைசாற்ற இயலும்'' என்று தெரிவித்தார்.

''அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகை காலத்தையொட்டி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்''.

''இன்னும் சில நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாட உள்ளோம். கரோனா காலத்தில் இந்திய ஆசிரியர்கள் மிக சவாலான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய ஆசிரியர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT