இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்காக இலவச பேருந்து சேவை

DIN

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வசதியாக தேர்வு மையங்களுக்கு இலவச பேருந்து சேவையை வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 

பொறியியல் தகுதித் தேர்வான ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரையிலும், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியிலும் நாடு முழுவதும் நடைபெற உள்ளன. கரோனா தொற்று பரவல் மத்தியில் மாணவர்களை மத்திய அரசு தேர்வுகள் எழுதக் கட்டாயப்படுத்துவதாகக் கூறி பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அரசு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்திருந்தது. கரோனா பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில் பொதுப்போக்குவரத்துகளான பேருந்து, ரயில் போன்ற சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு மாணவர்களுக்கு சிரமங்களை சந்திப்பர் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தொடர்ந்து  ஒடிசா மற்றும் சத்திஸ்கர் மாநில அரசுகள் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் சென்று வர இலவச பேருந்து சேவையை அறிவித்தன. 

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாணவர்களின்  நலன்கருதி ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றுவர இலவச பேருந்து சேவையை வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதற்கான அறிவிப்பை தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். அதில் “மாநிலம் முழுவதும் தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும். வீட்டிலிருந்து தேர்வு மையம் வரை சென்று வர ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 181 என்ற இலவச எண்ணிலோ அல்லது குறிப்பிட்ட இணைய தளத்திலோ விண்ணப்பிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கியதை மறுஆய்வு செய்யக்கோரி மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT