இந்தியா

ஓணம்: பத்மநாப சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கேரளத்தில் சிங்கம் மாத பிறப்பையொட்டி இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளத்திலும், தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு, வாழைமரங்களை கட்டி வீடுகளை அலங்கரித்து ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் கோயில்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கோயில்களில் கிருமிநாசினி வழங்குவது, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT