முகப்பு
இந்தியா

'தில்லியில் கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7 சதவிகிதத்துக்கும் கீழ் குறைவு'

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 டிசம்பர், 2020 at 4:07 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM


தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

"கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 4,006 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 7-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 15 சதவிகிதம். இது நேற்று 7 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இது மிகவும் வேகமாகக் குறைகிறது. வரும் நாள்களில் 5 சதவிகிதத்துக்கும் கீழ் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தற்போதைய நிலையில், தில்லி முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,600 படுக்கை வசதிகள், கரோனாவுக்காக பிரத்யேகமாக 11,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

விவசாயிகள் போராட்டத்துக்கு டிக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் தில்லி அரசு மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது" என்றார் அவர்.

தில்லியில் சமீபத்திய நிலவரப்படி புதன்கிழமை புதிதாக 3,944 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.