முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் கரோனா பாதிப்பு 2.71 லட்சமாக உயர்வு

தெலங்கானாவில் டிசம்பர் 3-ம் தேதி நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
Telangana reports 609 new COVID-19 positive cases, 3 deaths
பகிர்:

தெலங்கானாவில் டிசம்பர் 3-ம் தேதி நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 609 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.71 லட்சமாக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 8,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 3 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,465ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மாநிலத்தில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,61,028 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.