காற்று மாசு அதிகரிப்பு: காரணத்தைக் கண்டறிய தில்லி அரசுக்கு நோட்டீஸ்
காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணத்தைக் கண்டறிய தில்லி அரசுக்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணத்தைக் கண்டறிய தில்லி அரசுக்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டின் தலைநகான தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தில்லி அரசு சார்பில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் தலைநகரில் காற்றின் தரம் மோசமான நிலையை நோக்கியே செல்கிறது. இதனிடையே இது குறித்து பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்,
''தில்லியில் காற்று மாசு மோசமான நிலையிலேயே உள்ளது. விவசாயக் கழிவுகள் எரிப்பதை நிறுத்திய பிறகும் காற்று மாசு தில்லியில் தொடர்ந்து அதிகரிக்கிறது.
காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணத்தைக் கண்டறிய வலியுறுத்தி தில்லி அரசுக்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது'' என்று கூறினார்.