தில்லி போராட்டம்: டிசம்பர் 9-இல் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.
தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.
உறுதியான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.