முகப்பு
இந்தியா

விவசாயிகளின் பாரத் பந்த் அறிவிப்பு: ஆம் ஆத்மி ஆதரவு

விவசாயிகள் பாரத் பந்த் அறிவிப்பிற்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் (கோப்புப்படம்)
பகிர்:


விவசாயிகளின் பாரத் பந்த் அறிவிப்பிற்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும், தில்லி மக்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டதாகவும் கோபால் ராய் கூறினார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தயில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் வரும் 9-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அந்தவகையில் வரும் 8-ஆம் தேதி பாரத் பந்த்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆம் ஆத்மி அரசு ஆதரவளிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இந்தியா விவசாய நாடு என்றும், இதனால் நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →