நாட்டில் 138 நாள்களுக்கு பிறகு 4.03 லட்சமாக குறைந்த கரோனா
நாட்டில் 138 நாள்களுக்கு பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.03 லட்சமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் 138 நாள்களுக்கு பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.03 லட்சமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,02,529-ஆக இருந்த நிலையில், தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 36,011 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 96,44,222-ஆக அதிகரித்தது.
Advertisement
இதேபோல், கரோனாவில் இருந்து ஒரே நாளில் 41,970 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 91,00,792-ஆக அதிகரித்தது.
நாடு முழுவதும் 4,03,248 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுக்கு மேலும் 482 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,40,182-ஆக அதிகரித்தது.
டிசம்பா் 5-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 14,69,86,575 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சனிக்கிழமை மட்டும் 11,01,063 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.