முகப்பு
இந்தியா

அம்பேத்கர் நினைவு நாள்: மத்திய அமைச்சர் அமித் ஷா மரியாதை

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
பகிர்:

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார். 
சட்ட மேதை அம்பேத்கரின் 64ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சுட்டுரையில், “தேசத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வளர்ச்சி, வளம் மற்றும் சமத்துவத்தை வளர்க்கும் நோக்கத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய அரசியலமைப்பை வடிவமைத்த பாபாசாகேப் அவர்களை மகாபரிநிர்வாண் தினத்தன்று நான் வணங்குகிறேன். 
பாபாசாகேப் அவர்களின் காலடி தடத்தைப் பின்பற்றி, பல தசாப்தங்களாக வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையாத ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நல்வாழ்விற்காக மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →