முகப்பு
இந்தியா

குஜராத்தில் அடுத்தடுத்து 19 லேசான நிலநடுக்கங்கள் பதிவு

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ரிக்டர் அளவில் 1.7 முதல் 3.3 வரையிலான தொடர்ந்து 19 பூகம்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 7 டிசம்பர், 2020 at 12:04 PM
Southeast Turkey shaken by 5.0 magnitude quake 
பகிர்:

அகமதாபாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ரிக்டர் அளவில் 1.7 முதல் 3.3 வரையிலான தொடர்ந்து 19 பூகம்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் எந்தவொரு விபத்தும், இழப்பும் ஏற்படவில்லை என்று அறிக்கைகள் தெரிவித்தனர்.

காந்தி நகரத்தைத் தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஆர்) மூத்த அதிகாரி ஒருவர் இந்த நில அதிர்வுகள் பருவமழையால் ஏற்பட்டதாகும் என்றார். 

Advertisement

மேலும், அவர் கூறியதாவது, 

குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையின் தாக்கமே தவிர, வேறு எதுவும் இல்லை என்று கூறினார். இதுகுறித்து கவலைப்பட அவசியமில்லை. 

இன்று அதிகாலை 1.42 மணி முதல், 19 நிலநடுக்கங்கள், அதாவது 1.7 முதல் 3.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

சௌராஷ்டிராவின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலாவின் கிழக்கு-வடகிழக்கு மையப்பகுதிகளில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கங்களில் பெரும்பாலும் ரிக்டர் அளவில் 3 ஆகவே பதிவாகியது. இதில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 3.46 மணிக்கு பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி 12 கி.மீ. இல் இருந்தது. 

3.2 ரிக்டர் அளவிலான சமீபத்திய நிலநடுக்கம் காலை 9.26 மணியளவில் தலாலாவின் 11 கி.மீ மையப்பகுதியில் உணரப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

19 நிலநடுக்கங்களில் மூன்று உள்பட 3.1 ரிக்டர் அளவிலானவை என்று அவர் கூறினார். இது பருவமழையால் ஏற்பட்ட நில அதிர்வே ஆகும். 

மேலும், பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்போது, ​​இரண்டு மூன்று மாத மழைக்குப் பிறகு இதுபோன்ற நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன என்று ஐ.எஸ்.ஆர் இயக்குனர் சுமர் சோப்ரா கூறினார்.

இவை சிறிய அளவிலான நில அதிர்வுகளே தவிர வேறெந்த பாதிப்பும் இல்லை மக்கள் கவலைப்படத் தேவையில்லை, என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.