முகப்பு
இந்தியா

ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

ஆக்ரா மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.

Updated On : 7 டிசம்பர், 2020 at 1:05 PM
பகிர்:

லக்னௌ: ஆக்ரா மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் முதல் கட்டமாக சிகந்திரா-தாஜ் கிழக்கு நுழைவாயில் இடையே மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8,379.62 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான அடிக்கல்லை பிரதமா் மோடி கடந்த ஆண்டு மே மாதம் நாட்டினாா்.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று  தொடக்கி வைத்தார். 

Advertisement

ஆக்ரா மெட்ரோ ரயில் முதல் கட்ட வழித்தடம் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஜாமா மசூதி உள்ளிட்டவற்றை இணைக்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ளது.

அந்த வழித்தடத்தில் 6 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மூன்று மெட்ரோ நிலையங்கள் சுரங்கப் பாதையில் அமைக்கப்படும். இத்திட்டம் மூலமாக ஆக்ராவில் போக்குவரத்து நெரிசல் குறையும்; சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.