முகப்பு
இந்தியா

விவசாயிகள் சந்திப்பு திட்டத்தை அறிந்து தடுத்து நிறுத்தப்பட்டேன்: கேஜரிவால்

​விவசாயிகளைச் சந்திக்கவிருந்த எனது திட்டத்தை அறிந்து நான் தடுத்து நிறுத்தப்பட்டேன் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:


விவசாயிகளைச் சந்திக்கவிருந்த எனது திட்டத்தை அறிந்து நான் தடுத்து நிறுத்தப்பட்டேன் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் பகுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டது.

இதற்கிடையே சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கேஜரிவால் சந்தித்தார். அதன்பிறகு, தில்லி காவல் துறையினர் அவரை வீட்டுக் காவலில் வைத்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதனால், அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே பரபரப்பான சூழல் நிலவியது. 

இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் இதில் பங்கெடுத்தார். ஆனால், கேஜரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை தில்லி காவல் துறையினர் மறுத்தனர்.

இதன்பிறகு, சிசோடியா மற்றும் சில ஆம் ஆத்மி தொண்டர்கள் கேஜரிவாலைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே இல்லத்துக்கு வெளியே இருக்கும் தொண்டர்கள் மத்தியில் கேஜரிவால் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது:

"ஒரு முதல்வராக அல்லாமல், சாதாரண மனிதராக எல்லைகளுக்குச் சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், எனது திட்டம் குறித்து அவர்களுக்கு தெரிந்திருக்கிறது என நினைக்கிறேன். அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. ஆனால், நாடு தழுவிய முழு அடைப்பு வெற்றி பெற்றுள்ளது. நான் உள்ளே இருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக பிரார்த்தனை செய்தேன்."

முழு கட்டுரையைப் படிக்க →