முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி 

மத்தியப் பிரதேசத்தின் சதர்பூரில் கார் நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், மூன்று பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
6 dead after car falls into well in Madhya Pradesh's Chhatarpur
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் சதர்பூரில் கார் நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், மூன்று பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இங்குள்ள மகாராஜ்பூர் காவல் நிலைய பகுதியில், திருமண விழாவில் பங்கேற்றுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, கார் நிலைதடுமாறி அருகில் உள்ள கிணற்றில் விழுந்துள்ளது. 

இதையடுத்து காரில் பயணித்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை அனுப்பப்பட்டுள்ளன. 

விபத்து நடைபெற்ற இடத்தில் மகாராஜ்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
முழு கட்டுரையைப் படிக்க →