முகப்பு
இந்தியா

ஒரே பெயரில் 2 கரோனா நோயாளிகள்: உயிரோடு இருந்தவருக்கு இறப்புச் சான்றிதழ்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையில், ஊழியர்கள் செய்த குளறுபடியால், உயிரோடு சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் பெயரில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் க

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
ஒரே பெயரில் 2 கரோனா நோயாளிகள்: உயிரோடு இருந்தவருக்கு இறப்புச் சான்றிதழ்
பகிர்:

 
புது தில்லி: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையில், ஊழியர்கள் செய்த குளறுபடியால், உயிரோடு சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் பெயரில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து அரசு மருத்துவமனை உயர் அதிகாரிகள் கூறுகையில், ஒரே மருத்துவமனையில் கரோனா பாதித்து  ஸ்ரீனிவாஸ்குமார் என்ற பெயரில் இரண்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால்தான் இந்த குழப்பம் நேரிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

33 மற்றும் 44 வயதுடைய இரண்டு ஸ்ரீனிவாஸ்குமார்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 44 வயது ஸ்ரீனிவாஸ்குமார் பலியாகிவிட்டார். அப்போது பணியிலிருந்த செவிலியர்கள் தங்களது பணிநேரம் முடிந்து, புதிய செவிலியர் பணிக்கு வந்ததால், பெயர் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

இது குறித்து 33 வயது ஸ்ரீனிவாஸ்குமாரின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் டிசம்பர் 1ம் தேதி இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழ் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினர்.

உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு, இந்த விவகாரத்தை முடித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.