இந்தியா

கடும் பனிப்பொழிவு: மணாலி - லே நெடுஞ்சாலை மூடல்

DIN

கடுமையான பனிப்பொழிவு காரணமாக அடல் சுரங்கம் பகுதியில் மணாலி - லே நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நிலைமை சரியாகும்வரை பொதுமக்கள் நெடுஞ்சாலை வழியே பயணிக்க வேண்டாம் என்று ஹிமாசலப் பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

வட மாநிலங்களில் குறிப்பாக ஜம்மு - காஷ்மீர், ஹிமாசல் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. 

ஹிமாசலில் பழங்குடிகள் வசிக்கும் லஹால் மற்றும் ஸ்பிட்டி பகுதிகளில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இதனால் மணாலி - லே நெடுஞ்சாலையில் ரோஹ்தாங் அடல்சுரங்கத்திலிருந்து லஹால் பள்ளத்தாக்கு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இப்பகுதியில் செல்வது ஆபத்தானது என்றும் நிலைமை சரியாகும் வரை மக்கள் இந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT