முகப்பு
இந்தியா

தாராவியில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கரோனா

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 டிசம்பர், 2020 at 8:04 PM
தாராவி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,981 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,64,348 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 75 பேர் பலியாகியுள்ளனர், 5,111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 47,902 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 17,42,191 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 73,166 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

தாராவி:

தாராவியில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,736 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,410 பேர் ஏற்கெனவே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவியில் கடந்த 4-ம் தேதியும் ஒருவருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.