முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி: தன்னார்வலர்களாக மாறி 200 கி.மீ. பயணித்த இளம்தம்பதி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இளம் தம்பதி, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து போபால் சென்று, அங்கு நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசிக்கான மூன்றாம்கட்ட பரிசோதனையில் தங்களை தன்னார்வலர்களாக

Updated On : 9 டிசம்பர், 2020 at 6:01 PM
கரோனா தடுப்பூசி: தன்னார்வலர்களாக மாறி 200 கி.மீ. பயணித்த இளம்தம்பதி
பகிர்:


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இளம் தம்பதி, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து போபால் சென்று, அங்கு நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசிக்கான மூன்றாம்கட்ட பரிசோதனையில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி உற்பத்தியில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் தன்னார்வலர்கள் பற்றாக்குறை, இதுபோன்ற சுயநலமில்லாத நபர்கள் மூலம் தகர்க்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மனோஜ் ராய் கூறுகையில், நான் அவ்வப்போது எனது பணி நிமித்தமாக இந்தூரில் இருந்து தலைநகர் போபாலுக்கு செல்வது வழக்கம். அப்போதுதான் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வருவது எனக்குத் தெரிய வந்தது. உடனடியாக மாவட்ட அதிகாரிகளை சந்தித்து என்னை தன்னார்வலாக இணைத்துக கொண்டேன். 

வீட்டுக்கு வந்ததும், எனது மனைவியும் தன்னார்வலராக இருந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஆர்வம் தெரிவித்தார். இருவரும் டிசம்பர் 8ம் தேதி போபால் வந்தடைந்தோம், எங்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டோம் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.