விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் மக்கள் இயக்கம்: ஹசாரே எச்சரிக்கை
விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மக்கள் இயக்கத்தைத் தொடங்குவேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அஹமதுநகர்: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மக்கள் இயக்கத்தைத் தொடங்குவேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லோக்பால் மக்கள் இயக்கம் நடந்த போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியே ஆட்டம் கண்டது. தற்போது விவசாயிகள் போராட்டத்தையும் நான் அப்படியே பார்க்கிறேன். நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடந்த போது, நான் எனது ரலேகான் சித்தி கிராமத்தில் மக்கள் இயக்கத்தை நடத்தினேன். அன்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டததையும் நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால், நான் மீண்டும் மக்கள் இயக்கத்தைத் தொடங்குவேன். லோக் பாலை எதிர்த்து போராட்டம் நடத்தியதைப் போலவே போராட்டம் நடக்கும் என்று எச்சரித்துள்ளார்.